Laa yu'minoona bihee hattaa yarawul 'azaabal aleem
ஆகவே, துன்புறுத்தும் வேதனையை இவர்கள் (தங்கள் கண்ணால்) காணும் வரையில் இதனை நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
Fayaatiyahum baghtatanw wa hum laa yash'uroon
அவர்கள் உணர்ந்து கொள்ளாதவாறு திடுகூறாகவே (அந்நாள்) அவர்களை வந்தடையும்.
Fa yaqooloo hal nahnu munzaroon
அச்சமயம் அவர்கள் "எங்களுக்கு (ச் சிறிது) அவகாசம் கொடுக்கப்படுமா?
Aafabi 'azaabinaa yasta'jiloon
"எங்களை வேதனை செய்யவா இவர்கள் அவசரப் படுகின்றனர்?" என்று கூறுவார்கள்.
Aara'aita im matta'naahum sineen
(நபியே!) நீங்கள் கவனித்தீர்களா? நாம் இவர்களை (இவர்கள் விரும்புகிறவாறு) பல வருடங்கள் சுகமனுபவிக்கவிட்டு வைத்திருந்தபோதிலும்,
Summa jaaa'ahum maa kaanoo yoo'adoon
பின்னர், அவர்களைப் பயமுறுத்தும் வேதனை வந்தடையுமானால்
Maaa aghnaaa 'anhum maa kaanoo yumaatoo'oon
அவர்கள் அனுபவித்த சுகபோகங்கள் ஒன்றுமே அவர்களுக்கு யாதொரு பயனுமளிக்காதே!
Wa maaa ahlaknaa min qaryatin illaa lahaa munziroon
(உபதேசம் செய்து) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களை அனுப்பாத வரையில் எவ்வூராரையும் நாம் அழித்துவிடவில்லை.
Zikraa wa maa kunnaa zaalimeen
(ஒரு தூதரை அனுப்பி, வேதனைப் பற்றி) ஞாபகமூட்டாது நாம் (எவரையும் அழித்து) அநியாயம் செய்தவனாக இருக்கவில்லை.
Wa maa tanazzalat bihish Shayaateen
(இவர்கள் கூறுகின்றவாறு) இவ்வேதத்தை ஷைத்தான் இறக்கவுமில்லை.