Skip to main content

وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
لَهُمْ
அவர்களுக்கு
ءَامِنُوا۟
நம்பிக்கை கொள்ளுங்கள்
بِمَآ أَنزَلَ
எதை/இறக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
قَالُوا۟
கூறுகிறார்கள்
نُؤْمِنُ
நம்பிக்கை கொள்கிறோம்
بِمَآ أُنزِلَ
எதை/இறக்கப்பட்டது
عَلَيْنَا
எங்கள் மீது
وَيَكْفُرُونَ
இன்னும் நிராகரிக்கிறார்கள்
بِمَا وَرَآءَهُۥ
எதை/அதற்கு அப்பால்
وَهُوَ
அதுவோ
ٱلْحَقُّ
உண்மை
مُصَدِّقًا
உண்மைப்படுத்தக் கூடியது
لِّمَا مَعَهُمْۗ
எதை/அவர்களிடம்
قُلْ
கூறுவீராக
فَلِمَ
எதற்காக
تَقْتُلُونَ
கொலை செய்தீர்கள்
أَنۢبِيَآءَ
தூதர்களை
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
مِن قَبْلُ
முன்னர்
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Wa izaa qeela lahum aaminoo bimaaa anzalal laahu qaaloo nu'minu bimaaa unzila 'alainaa wa yakfuroona bimaa waraaa'ahoo wa huwal haqqu musaddiqal limaa ma'ahum; qul falima taqtuloona Ambiyaaa'al laahi min qablu in kuntum mu'mineen

"அல்லாஹ் இறக்கிவைத்த (இ)தை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால் "எங்கள் (நபிமார்கள்) மீது இறக்கப்பட்டவை(யான வேதங்)களை (மட்டுமே) நம்பிக்கை கொள்வோம்" எனக் கூறி அவைகளைத் தவிர உள்ள இ(ந்)த(க்குர்ஆ)னை நிராகரித்து விடுகின்றார்கள். ஆனால், இதுவோ அவர்களிடமுள்ள (தவ்றாத்)தை மெய்யாக்கி வைக்கின்ற உண்மையா(ன வேதமா)க இருக்கிறது. (நபியே! நீங்கள் அவர்களை நோக்கிக்) கேளுங்கள்: "(உங்கள் வேதத்தை) உண்மையாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (உங்களில் தோன்றிய) அல்லாஹ்வுடைய நபிமார்களை இதற்கு முன் நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?"

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
جَآءَكُم
வந்தார் உங்களிடம்
مُّوسَىٰ
மூசா
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளுடன்
ثُمَّ
பிறகு
ٱتَّخَذْتُمُ
எடுத்துக்கொண்டீர்கள்
ٱلْعِجْلَ
காளைக் கன்றை
مِنۢ بَعْدِهِۦ
அவருக்குப் பின்னர்
وَأَنتُمْ
நீங்களோ
ظَٰلِمُونَ
அநியாயக்காரர்கள்

Wa laqad jaaa'akum Moosa bilbaiyinaati summat takhaztunmul 'ijla mim ba'dihee wa antum zaalimoon

(இஸ்ராயீலின் சந்ததிகளே!) நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். ஆனால், நீங்களோ அதற்குப் பின்னும் ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள். (இவ்வாறே ஒவ்வொரு விஷயத்திலும்) நீங்கள் (வரம்பு கடந்த) அநியாயக்காரர்களாகவே இருக்கின்றீர்கள்.

Tafseer

وَإِذْ أَخَذْنَا
இன்னும் சமயம்/வாங்கினோம்
مِيثَٰقَكُمْ
உறுதிமொழியை/உங்கள்
وَرَفَعْنَا
இன்னும் உயர்த்தினோம்
فَوْقَكُمُ
மேல்/உங்களுக்கு
ٱلطُّورَ
மலையை
خُذُوا۟
(கடைப்)பிடியுங்கள்
مَآ
எதை
ءَاتَيْنَٰكُم
கொடுத்தோம்/ உங்களுக்கு
بِقُوَّةٍ
பலமாக
وَٱسْمَعُوا۟ۖ
இன்னும் செவிசாயுங்கள்
قَالُوا۟
கூறினார்கள்
سَمِعْنَا
செவியுற்றோம்
وَعَصَيْنَا
இன்னும் மாறு செய்தோம்
وَأُشْرِبُوا۟
இன்னும் ஊட்டப்பட்டார்கள்
فِى قُلُوبِهِمُ
அவர்களுடைய உள்ளங்களில்
ٱلْعِجْلَ
காளைக் கன்றை
بِكُفْرِهِمْۚ
நிராகரிப்பின் காரணமாக/அவர்களுடைய
قُلْ
கூறுவீராக
بِئْسَمَا
கெட்டது/எது
يَأْمُرُكُم
ஏவுகிறது/உங்களுக்கு
بِهِۦٓ
அதை
إِيمَٰنُكُمْ
நம்பிக்கை/உங்கள்
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Wa iz akhaznaa meesaaqakum wa rafa'naa fawqa kumut Toora khuzoo maaa aatainaakum biquwwatinw wasma'oo qaaloo sami'naa wa 'asainaa wa ushriboo fee quloobihimul 'ijla bikufrihim; qul bi'samaa yaamurukum biheee eemaanukum in kuntum m'mineen

உங்க(ள் மூதாதை)களிடம் நாம் வாக்குறுதி வாங்கிய நேரத்தில் அவர்களுக்கு மேல் "தூர்" என்ற மலையை உயர்த்தி "உங்களுக்கு நாம் கொடுத்த (தவ்றாத்)தை உறுதியாகக் கடைப் பிடியுங்கள். (அதற்குச்) செவிசாயுங்கள்" என்று கூறியதற்கு (அவர்கள் "நீங்கள் கூறியதைச்) செவியுற்றோம். (ஆனால் அதற்கு) மாறு செய்வோம்" என்று கூறினார்கள். ஆகவே, அவர்கள் (நம் கட்டளையை) நிராகரித்(து மாறு செய்)ததன் காரணமாக அவர்களுடைய உள்ளங்களில் ஒரு காளைக் கன்று(டைய பிரியம்) ஊட்டப்பட்டுவிட்டது. "(இந்நிலையிலும்) நீங்கள் (தவ்றாத்தை) நம்பிக்கை கொண்டவர்கள் என்(று உங்களைக் கூறுவதென்)றால் இவ்வாறு செய்யும்படி உங்களைத் தூண்டும் அந்த நம்பிக்கை (மிகக்) கெட்டது" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக
إِن كَانَتْ
இருந்தால்
لَكُمُ
உங்களுக்கு
ٱلدَّارُ
வீடு
ٱلْءَاخِرَةُ
மறுமை
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடத்தில்
خَالِصَةً
மட்டும்
مِّن دُونِ
அன்றி/மக்களுக்கு
فَتَمَنَّوُا۟
விரும்புங்கள்
ٱلْمَوْتَ
மரணத்தை
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Qul in kaanat lakumud Daarul Aakhiratu 'indal laahi khaalisatam min doonin naasi fatamannawul mawta in kuntum saadiqeen

"(யூதர்களே!) அல்லாஹ்விடமிருக்கும் மறுமை(யின் சுவர்க்க) வீடு (மற்ற) மனிதர்களுக்கன்றி உங்களுக்கே சொந்தமென்று (கூறும்) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால் (உங்களுக்குச் சொந்தமான அவ்வீட்டிற்குச் செல்வதற்கு) நீங்கள் மரணத்தை விரும்புங்கள்" என (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

Tafseer

وَلَن يَتَمَنَّوْهُ
விரும்பவே மாட்டார்கள்/அதை
أَبَدًۢا
ஒரு போதும்
بِمَا
காரணமாக/எதன்
قَدَّمَتْ
முற்படுத்தின
أَيْدِيهِمْۗ
அவர்களின் கரங்கள்
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
بِٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை

Wa lai yatamannawhu abadam bimaa qaddamat aydeehim; wallaahu 'aleemum bizzaalimeen

(ஆனால்) அவர்கள் கரங்கள் (செய்து) அனுப்பியிருக்கும் (பாவங்களின்) காரணத்தால் அதை அவர்கள் அறவே விரும்பவே மாட்டார்கள். (இந்த) அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிவான்.

Tafseer

وَلَتَجِدَنَّهُمْ
நிச்சயமாகக் காண்பீர்/அவர்களை
أَحْرَصَ
பேராசைக்காரர்(களாக)
ٱلنَّاسِ
மக்களை விட
عَلَىٰ
மீது
حَيَوٰةٍ
வாழ்க்கை
وَمِنَ
இன்னும் விட
ٱلَّذِينَ أَشْرَكُوا۟ۚ
இணைவைப்பவர்கள்
يَوَدُّ
விரும்புவார்
أَحَدُهُمْ
ஒருவர்/அவர்களில்
لَوْ يُعَمَّرُ
வாழ்வு கொடுக்கப்பட வேண்டுமே
أَلْفَ
ஆயிரம்
سَنَةٍ
ஆண்டு(கள்)
وَمَا
இன்னும் இல்லை
هُوَ
அது
بِمُزَحْزِحِهِۦ
தப்பிக்க வைத்துவிடக் கூடியது/அவனை
مِنَ ٱلْعَذَابِ
வேதனையிலிருந்து
أَن يُعَمَّرَۗ
வாழ்வு கொடுக்கப்படுவது
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
بَصِيرٌۢ
உற்று நோக்குபவன்
بِمَا يَعْمَلُونَ
எதை/செய்கிறார்கள்

Wa latajidannahum ahrasannaasi 'alaa hayaatinw wa minal lazeena ashrakoo; yawaddu ahaduhum law yu'ammaru alfa sanatinw wa maa huwa bi muzahzihihee minal 'azaabi ai yu'ammar; wallaahu baseerum bimaa ya'maloon

அன்றி, (நபியே! அந்த யூதர்கள்) மற்ற மனிதர்களை விடவும் (குறிப்பாக இணைவைத்து வணங்கும்) முஷ்ரிக்குகளை விடவும் (நீண்ட நாள்) உயிர்வாழ மிகவும் பேராசை உடையவர்களாக இருப்பதை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள்! அவர்களில் ஒவ்வொருவனும் "நான் ஆயிரம் ஆண்டுகள் உயிர்வாழ வேண்டுமே?" என்று விரும்புவான். (அவ்வாறு நீண்ட நாள்) யிருடன் இருக்க அவனை விட்டு வைத்தாலும் அது வேதனையிலிருந்து ஒரு சிறிதும் அவனைத் தப்பிக்க வைத்துவிட மாட்டாது. அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவனாக இருக்கின்றான்.

Tafseer

قُلْ
கூறுவீராக
مَن
யார்
كَانَ
ஆகிவிட்டார்
عَدُوًّا
எதிரியாக
لِّجِبْرِيلَ
ஜிப்ரீலுக்கு
فَإِنَّهُۥ
நிச்சயமாக அவர்
نَزَّلَهُۥ
இறக்கினார்/அதை
عَلَىٰ
மீது
قَلْبِكَ
உள்ளம்/உம்
بِإِذْنِ
அனுமதி கொண்டு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
مُصَدِّقًا
உண்மைப்படுத்தக் கூடியதாக
لِّمَا بَيْنَ
எதை/முன்னர்/அதற்கு
وَهُدًى
இன்னும் நேர்வழியாக
وَبُشْرَىٰ
இன்னும் நற்செய்தியாக
لِلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு

Qul man kaana 'aduwwal li Jibreela fainnahoo nazzalahoo 'alaa qalbika bi iznil laahi musaddiqal limaa baina yadihi wa hudanw wa bushraa lilmu'mineen

"(உங்களில்) எவர் ஜிப்ரீலுக்கு எதிரி" என (நபியே! நீங்கள் யூதர்களை)க் கேளுங்கள். நிச்சயமாக அவர் இதனை அல்லாஹ்வின் கட்டளைப்படியே உங்களது உள்ளத்தில் இறக்கிவைத்தார். இது தனக்கு முன்னுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்துவதாகவும், நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும், நம்பிக்கை உடையவர்களுக்கு நற்செய்தியாகவும் இருக்கின்றது.

Tafseer

مَن كَانَ
எவர்(கள்)/ ஆகிவிட்டார்(கள்)
عَدُوًّا لِّلَّهِ
எதிரிகளாக/ அல்லாஹ்வுக்கு
وَمَلَٰٓئِكَتِهِۦ
இன்னும் வானவர்கள்/அவனுடைய
وَرُسُلِهِۦ
இன்னும் தூதர்கள்/அவனுடைய
وَجِبْرِيلَ
இன்னும் ஜிப்ரீல்
وَمِيكَىٰلَ
இன்னும் மீகால்
فَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
عَدُوٌّ
எதிரி
لِّلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு

Man kaana 'aduwwal lillaahi wa malaaa'ikatihee wa Rusulihee wa Jibreela wa Meekaala fa innal laaha 'aduwwul lilkaafireen

(உங்களில்) எவரேனும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயீலுக்கும் எதிரியாகி (அவர்களை நிராகரித்து) விட்டால் (அந்)நிராகரிப்பவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் எதிரியாகவே இருப்பான்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
أَنزَلْنَآ
இறக்கினோம்
إِلَيْكَ
உமக்கு
ءَايَٰتٍۭ
வசனங்களை
بَيِّنَٰتٍۖ
தெளிவானவை
وَمَا يَكْفُرُ
இன்னும் நிராகரிக்க மாட்டார்(கள்)
بِهَآ إِلَّا
அவற்றை/தவிர
ٱلْفَٰسِقُونَ
பாவிகள்

Wa laqad anzalnaaa ilaika Aayaatim baiyinaatinw wa maa yakfuru bihaaa illal faasiqoon

(நபியே!) நிச்சயமாக மிகத் தெளிவான வசனங்களையே உங்களுக்கு இறக்கியிருக்கின்றோம். ஆதலால் பாவிகளைத் தவிர (மற்றெவரும்) அவைகளை நிராகரிக்க மாட்டார்கள்.

Tafseer

أَوَكُلَّمَا
இன்னும் / போதெல்லாம்
عَٰهَدُوا۟
உடன்படிக்கை செய்தார்கள்
عَهْدًا
ஓர் உடன்படிக்கையை
نَّبَذَهُۥ
எறிந்தார்(கள்)/அதை
فَرِيقٌ
பிரிவினர்
مِّنْهُمۚ
அவர்களில்
بَلْ
மாறாக
أَكْثَرُهُمْ
அதிகமானோர் அவர்களில்
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Awa kullamaa 'aahadoo ahdan nabazahoo fareequm minhum; bal aksaruhum laa u'minoon

அவர்கள் (தங்கள் நபியிடம்) எவ்வுடன்படிக்கையைச் செய்தபோதிலும் அவர்களில் ஒரு பிரிவினர் அதனை (நிறைவேற்றாது) எடுத்தெறிந்து விடவில்லையா? ஆகவே அவர்களில் பெரும்பாலோர் (இதனை) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

Tafseer