Wa izaa qeela lahum ta'aalaw ilaa maaa anzalallaahu wa ilar Rasooli ra aital munaafiqeena yasuddoona 'anka sudoodaa
"(நியாயம் பெற) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கம், (அவனது) தூதரின் பக்கம் நீங்கள் வாருங்கள். (அந்த ஷைத்தானிடம் செல்லாதீர்கள்.)" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந் நயவஞ்சகர்கள் உங்களைவிட்டு முற்றிலும் விலகிவிடுவதையே நீங்கள் காண்பீர்கள்.
Fakaifa izaaa asaabathum museebatum summa jaaa'ooka yahlifoona billaahi in aradnaaa illaaa ihsaananw wa tawfeeqaa
(நபியே!) அவர்களின் கரங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக அவர்களுக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்ட சமயத்தில் (அதற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாமலாகிவிட்ட அவர்களின் இழி நிலைமை) எவ்வாறு இருந்தது (என்பதை நீங்கள் கவனியுங்கள்.) பின்னர் அவர்கள் உங்களிடமே வந்து "(அந்த ஷைத்தானிடம் நாங்கள் சென்றதெல்லாம்) நன்மையையும் ஒற்றுமையையும் கருதியேயன்றி, வேறொன்றையும் நாங்கள் விரும்பவில்லை" என்று அல்லாஹ்வின் பேரால் சத்தியம் செய்கின்றனர்.
Ulaaa'ikal lazeena ya'la mullaahu maa fee quloobihim fa a'rid 'anhum wa 'izhum wa qul lahum feee anfusihim qawlam baleeghaa
இத்தகையவர்களின் உள்ளங்களில் இருப்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான். ஆகவே, (நபியே!) நீங்கள் அவர்(களின் குற்றங்)களைப் புறக்கணித்து அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். அன்றி (அவர்களில் உள்ள கெடுதல்களை) அவர்களுக்கு மனதில் படும்படித் தெளிவாக எடுத்துக் கூறுங்கள்.
Wa maa arsalnaa mir Rasoolin illaa liyutaa'a bi iznil laah; wa law annahum 'iz zalamooo anfusahum jaaa'ooka fastaghfarul laaha wastaghfara lahumur Rasoolu la wajadul laaha Tawwaabar Raheemaa
அல்லாஹ்வுடைய அனுமதிகொண்டு (மக்கள்) அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நாம் எந்த தூதரையும் அனுப்பவில்லை. ஆகவே, அவர்களில் (எவரும் இதற்கு மாறு செய்து) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்திலும், (நபியே!) உங்களிடம் வந்து அல்லாஹ்விடம் (தங்கள்) பாவமன்னிப்பைக் கோரினால், அத்துடன் அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூதராகிய நீங்களும் பாவ மன்னிப்பைக் கோரினால் அன்புடையவனாகவும், மன்னிப்பு டையவனாகவுமே அவர்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள்.
Falaa wa Rabbika laa yu'minoona hattaa yuhakkimooka fe emaa shajara bainahum summa laa yajidoo fee anfusihim harajam mimmaa qadaita wa yusal limoo tasleemaa
உங்கள் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உங்களை நீதிபதியாக நியமித்து நீங்கள் செய்யும் தீர்ப்பை தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி முற்றிலும் ஏற்காத வரையில் அவர்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக மாட்டார்கள்.
Wa law annaa katabnaa 'alaihim aniq tulooo anfusakum awikh rujoo min diyaarikum maa fa'aloohu illaa qaleelum minhum wa law annahum fa'aloo maa yoo'azoona bihee lakaana khairal lahum wa ashadda tasbeetaa
நாம் அவர்களை நோக்கி "(நிராகரிக்கும்) உங்(கள் மக்)களை நீங்கள் வெட்டுங்கள். அல்லது வீட்டை விட்டுப் (வேறு நாட்டுக்குப்) புறப்பட்டு விடுங்கள்" என்று கட்டளையிட்டிருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பான்மையினர் இவ்வாறு) செய்யவே மாட்டார்கள். எனினும், அனைவரும் தங்களுக்கு அறிவுறுத்தியபடி செய்திருப்பார்களேயானால் அது அவர்களுக்கே மிக்க நன்றாய் இருந்திருக்கும். அன்றி (நம்பிக்கையில் அவர்களை) மிக உறுதிப்படுத்தியும் இருக்கும்.
Wa izal la aatainaahum mil ladunnaaa ajran 'azeemaa
அது சமயம் அவர்களுக்கு நம்மிடமிருந்து மேற்கொண்டும் மகத்தான ஒரு கூலியை நிச்சயமாக நாம் கொடுத்திருப்போம்.
Wa lahadainaahum Siraatam mustaqeemaa
மேலும், அவர்களை நாம் நேரான வழியில் செலுத்தியுமிருப்போம்.
Wa many-yuti'il laaha war Rasoola fa ulaaa'ika ma'al lazeena an'amal laahu 'alaihim minan nabiyyeena wassiddeeqeena washshuhadaaa'i wassaaliheen; wa hasuna ulaaa'ika rafeeqaa
எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்படுகின்றார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்கப்போரில் உயிர்நீத்த தியாகிகள், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில்) வசிப்பார்கள். இவர்கள்தாம் மிக அழகான தோழர்கள்.
Zaalikal fadlu minal laah; wa kafaa billaahi 'Aleemaa
இது அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையாகும். அல்லாஹ்வே நிறைவான அறிஞனாக இருக்கின்றான்.